யாழ்.கொடிகாமத்தில் உயிரிழந்த இளைஞன் விபத்தினாலலேயே உயிரிழப்பு! கொலை அல்ல. பரிசோதனையில் முடிவு..

ஆசிரியர் - Editor I
யாழ்.கொடிகாமத்தில் உயிரிழந்த இளைஞன் விபத்தினாலலேயே உயிரிழப்பு! கொலை அல்ல. பரிசோதனையில் முடிவு..

யாழ்.கொடிகாமம் - காரைக்காட்டு வீதியில் உயிரிழந்த இளைஞன் விபத்தினாலேயே உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

கடந்த 14ம் திகதி இரவு மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் இ.நவர்ணன் (வயது24) என்ற இளைஞன் உயிரிழந்தார். 

இந்நிலையில் இளைஞனின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக பெற்றோர் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்திருந்தனர். 

இதனடிப்படையில் மரண விசாரணை நடத்துமாறு நீதிமன்றம் பணித்திருந்தமைக்கமை யாழ்.போதனா வைத்தியசாலை மரண விசாரணை நிபுணர் மேற்கொண்ட பரிசோதனையில்,

விபத்தினால் இதயம் சேதமடைந்துள்ளமை மரணத்திற்கு காரணம் என கூறப்பட்டுள்ளது. 

Radio