யாழ்.மாவட்டத்தில் மேலும் 69 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! தொடரும் அபாயம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் மேலும் 69 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! தொடரும் அபாயம்..

யாழ்.மாவட்டத்தில் மேலும் 69 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக மாவட்ட அனர்த்த நிலமை தொடர்பான நாளாந்த நிலவர அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதன்படி பீ.சி.ஆர் பரிசோதனைகளில் 23 பேருக்கும், அன்டிஜன் பரிசோதனைகளில் 46 பேருக்குமாக மாவட்டத்தில் 69 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மேலும் மாவட்டத்தில் ஒரு கொவிட் மரணம் பதிவாகியுள்ளதுடன், இதுவரை மாவட்டத்தில் 15324 தொடற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 

341 கொவிட் மரணங்களும் இதுவரை பதிவாகியுள்ளது.

Radio