யாழ்.பிள்ளையார் குளத்திற்கு பௌத்த கொடியை ஒத்ததாக வர்ணம்! கடந்த சில நாட்களுக்கு முன் அமைச்சர் நாமல் பார்வையிட்டிருந்தார்..
யாழ்.பொஸ்கோ பாடசாலைக்கு முன்பாகவுள்ள பிள்ளையார் குளம் புனரமைப்பு செய்யப்படும் நிலையில் குளத்தை சுற்றி புதிதாக கட்டப்பட்டிருக்கும் பாதுகாப்பு சுவர்களில் பௌத்த கொடியை ஒத்த வர்ணம் தீட்டப்பட்டதாக சர்ச்சைகள் எழுந்துள்ளது.
உலக வங்கியின் நிதி அனுசரணையுடன் மீளப் புனரமைக்கப்பட்டுவருகின்ற குளத்தில் சுற்று கம்பங்களுக்கு இவ்வாறு பௌத்த கொடியிலுள்ள நிறங்களை பொறிக்கும் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றது.
1996 ஆம் ஆண்டு 1.51(0.6063) ஏக்கராக இருந்த குளததின் பரப்பளவு 2013 ஆண்டு மீள அளக்கப்பட்ட நிலையில்1.26(0.5078) ஏக்கராக குறைவடைந்துள்ளது. இவ்வாறான நிலையில் குறித்த குளம் தற்போது புனரமைக்கும்போது
குளத்திலிருந்து தூர்வாரப்பட்ட மண்ணை மீண்டும் குளத்தின் சுற்றுப்புறங்களில் கொட்டியதாக குற்றச்சாட்டுகளும் இருந்தது. இந்நிலையில் யாழ்.மாவட்டத்தில் இடம்பெறும் அபிவிருத்திகள் தொடர்பில் கள ஆய்வுகளை மேற்கொள்வதற்காக
கடந்த வாரம் அமைச்சர் நாமல் ராஜபக்ச குறித்த குளத்தின் அபிவிருத்தி பணிகளை பார்வையிட்டிருந்தார். இவ்வாறான நிலையில் அவர் பார்வையிட்டு சென்ற நிலையில் இவ்வாறு இடம்பெறுவது பலருக்கும் சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.