யாழ்.கொட்டடியில் கோவில் வாசலில் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி!

ஆசிரியர் - Editor I
யாழ்.கொட்டடியில் கோவில் வாசலில் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி!

யாழ்.வல்வெட்டித்துறையிலிருந்து யாழ்.நகரை அண்மித்த கொட்டடி பகுதியில் உள்ள கோவில் ஒன்றுக்கு வந்திருந்த நிலையில் கோவில் வாசலில் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்திருந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, வல்வெட்டித்துறை நெடியகாடு பகுதியை சேர்ந்த 68 வயதான ஸ்ரீ ராஜேந்திரா சந்திரவதனா என்ற பெண் கொட்டடியில் உள்ள ஆலயம் ஒன்றுக்கு வந்திருந்த நிலையில் கோவில் வாசலில் திடீரென மயங்கி விழுந்து இறந்துள்ளார். 

இந்நிலையில் இறப்பின் பின்னர் யாழ்.போதனா வைத்தியசாலையில் நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

Radio