தமிழ் கட்சிகள் மக்களை திசை திருப்ப நடாத்தும் நாடகமே ஐ.நா.. அங்கயன் தொிவிப்பு..

ஆசிரியர் - Editor I
தமிழ் கட்சிகள் மக்களை திசை திருப்ப நடாத்தும் நாடகமே ஐ.நா.. அங்கயன் தொிவிப்பு..

கொரோனா இக்கட்டான சூழ்நிலையில் தமிழ் கட்சிகள் மக்களை நம்ப வைக்க நடாத்தும் நாடகமே ஐ.நாவுக்கு அறிக்கை அனுப்பும் செயற்பாடு என யாழ்.மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளருமா அங்கயன் இராமநாதன் தெரிவித்தார்.

இன்றைய தினம் யாழ் கொழும்புத்துறை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கே அவர் இவ்வாறு பதிலளித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் பல வருடங்களாக தமிழ் கட்சிகள் ஐ.நாவுக்கு கடிதம் அனுப்புகின்ற நிலையில்

தமிழ் மக்களுக்கு எதனை பெற்றுள்ளார்கள் என்பது கேள்வியே. தற்போதைய சூழ்நிலையில் ஐநாவுக்கு கடிதம் அனுப்பியது தொடர்பில் தமிழ் கட்சிகளிடையே கட்சி முரண்பாடுகளும் மாற்றுக் கருத்துக்களும் இடம்பெற்றுவருகின்றன.தமிழ் மக்களுக்காக தமிழ் பேசும் ஓரணியில் நிற்கிறோம் என அறிக்கை தயாரிக்க தொடங்குவார்கள் 

பின்னர் ஒவ்வொருவரும் தமக்குள் பிளவுபட்டு ஒவ்வொரு குழுவாக அறிக்கைகள் அனுப்புகிறார்கள்.இவ்வாறு அறிக்கை அனுப்புவது இன்று நேற்று தொடங்கியதல்ல காலங்காலமாக இதையே அவர்கள் செய்து வருகிறார்கள்.மக்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் இருக்கிறது அதையெல்லாம் விடுத்து தமது அரசியல் இருப்பைத் தக்க வைப்பதற்காக 

ஐ.நா ஆரம்பித்ததும் கோஷம் எழுப்புகின்றனர். ஆகவே இவர்களைப் பற்றி அதிகம் பேசுவதை விட மக்களுக்கு தேவையான விடயங்களை செய்து கொடுப்பதே தனது கடமை என அவர் மேலும் தெரிவித்தார்.

Radio