வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்திற்கு கொரோனா தொற்று உறுதி!
தமிழ்தேசிய கட்சியின் பொதுச் செயலாளரும், வடமாகாணசபை முன்னாள் உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.
காய்ச்சல் மற்றும் இருமல் காரணமாக வல்வெட்டித்துறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற சென்றிருந்த சிவாஜிலிங்கத்திற்கு நடத்தப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் தொற்று
உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து உடனடியாக நோயாளர் காவு வண்டி மூலமாக யாழ்.போதனா வைத்தியசாலையினால் இயக்கப்படும்
கோப்பாய் கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டிருக்கின்றார்.