நல்லுார் ப.நோ.கூட்டுறவு சங்க கிளைக்கு எதிராக வழக்கு! உறக்கத்திலிருந்து எழுந்த பாவனையாளர் அதிகாரசபை துரித நடவடிக்கை..
நல்லுார் ப.நோ.கூ சங்கத்தில் அதிக விலைக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை விற்பனை செய்த விடயத்தில் ப.நோ.கூ சங்க கிளைக்கு எதிராக பாவனையாளர் அதிகாரசபையினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றது.
நல்லூர் பலநோக்கு கூட்டுறவு சங்க கிளை ஒன்றில் ஒரு கிலோ சீனி 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டமை தொடர்பில் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினருக்கு முறைப்பாடு வழங்கப்பட்டது அதன் பிரகாரம்
அவர்கள் துரித நடவடிக்கைகளை முன்னெடுத்து வழக்கு தொடர்ந்துள்ளனர்.