யாழ்.மாவட்டத்தில் இடம்பெறும் அபிவிருத்தி பணிகளை கண்காணிக்க வருகிறார் அமைச்சர் நாமல்! நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜனின் அழைப்பில்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் இடம்பெறும் அபிவிருத்தி பணிகளை கண்காணிக்க வருகிறார் அமைச்சர் நாமல்! நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜனின் அழைப்பில்..

யாழ்.மாவட்ட அபிவிருத்தி திட்டங்களை பார்வையிடுவதற்காக மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு இணைத் தலைவரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளருமாகிய அங்கயன் இராமநாதனின் அழைப்பை ஏற்று அமைச்சர் நாமல் ராஜபக்ஸ,

நாளைய தினம் வியாழக்கிழமை காலை யாழ்.மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகளுக்கு மேலதிகமாக அபிவிருத்தி ஒருங்கிணைப்பு மேற்பார்வை முகாமைத்துவம் 

ஆகிய பதவிகள் வர்த்தகமானி ஊடாக வழங்கப்பட்ட நிலையில் முதற்கட்டமாக யாழ்ப்பாணத்தின் அபிவிருத்திகள் தொடர்பில் கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். பெரு நகர அபிவிருத்தி அமைச்சின் கீழ்

நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன யாழ்.மாநகர சபை புதிய கட்டடம் , வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மேற்பார்வையில் இடம்பெற்றுவருகின்ற ஐ திட்ட விதிகள், மத்திய கல்வி அமைச்சின் கீழ் இடம்பெற்று வருகின்ற தெல்லிப்பளை அருணோதயா பாடசாலைக் கட்டடம், 

பல்பரிமாண நகர திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்பட உள்ள மருதனார்மடம், விளையாட்டுத்துறை அமைச்சின் கீழ் புனரமைக்கப்படவுள்ள நல்லூர் கலைமகள் விளையாட்டு மைதானம் ஆகியவற்றின் அபிவிருத்திகள் தொடர்பில் 

விஜயம் மேற் கொள்ளப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு