யாழ்.மாவட்டத்தில் நம்பிக்கை தரும் அளவுக்கு கொரோனா அபாயம் குறையவில்லை! யாழ்.மாவட்ட செயலர் மக்களிடம் விடுத்துள்ள கோரிக்கை..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் நம்பிக்கை தரும் அளவுக்கு கொரோனா அபாயம் குறையவில்லை! யாழ்.மாவட்ட செயலர் மக்களிடம் விடுத்துள்ள கோரிக்கை..

யாழ்.மாவட்டத்தில் கொரோனா அபாயம் நம்பிக்கை தரும் அளவுக்கு குறைவதாக இல்லை. என கூறியிருக்கும் யாழ்.மாவட்டச் செயலர் க.மகேஸன் பொதுமக்கள் மிக விழிப்பாக இருங்கள் என வேண்டுகோள் விடுத்திருக்கின்றார். 

யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறியிருக்கின்றார். இது தொடர்பாக மேலும் அவர் கூறுகையில், மாவட்டத்தில் மொத்தமாக 14192 பேர் இன்றுவரை இனங்காணப்பட்டுள்ளார்கள். 

281 இறப்புக்கள் பதிவாகியுள்ளன. மருதங்கேணியில் 3 கிராமசேவகர் பிரிவும் வேலணையில் ஒரு கிராமசேவகர் பிரிவுமாக 4 கிராமங்கள் தற்போது முடக்கத்தில் உள்ளன. பொது முடக்கத்திலும் பொதுமக்கள் கட்டுப்பாடுகளை அனுசரித்து நடந்து கொள்ளாமை 

அவதானிக்கக் கூடியதாக உள்ளது. எனவே பொதுமக்கள் தற்போதுள்ள பொது முடக்கத்தை துஸ்பிரயோகம் செய்யாது சுகாதார நடைமுறைகளை பின்பற்றி செயற்படுவதன் மூலம் இறப்புகளில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு