கால், கை சிதைவடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மீனவர்! 5 மணி நேரம் சிகிச்சையில் மறுவாழ்வு கொடுத்த வைத்தியர் இளஞ்செழிய பல்லவன்..
யாழ்.பருத்தித்துறை கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது தவறி கடலில் விழுந்த நிலையில் வலது கை மற்றும் வலது காலில் படகின் காற்றாடிக்குள் சிக்கி சிதைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவருக்கு பிளாஸ்டிக் சத்திர சிகிச்சை மூலம் சிதைவடைந்த பாகங்களை மீள இணைக்கப்பட்டுள்ளது.
யாழ்.போதனா வைத்தியசாலை பிளாஸ்டிக் சத்திர சிகிச்சை நிபுணர் இளஞ்செழிய பல்லவன் சுமார் 5 மணி நேரம் மேற்கொண்ட சத்திர சிகிச்சை மூலம் மீனவருக்கு மீண்டும் மறுவாழ்வு கிடைத்திருக்கின்றது. மன்னாரை சேர்ந்த குறித்த மீனவர் பருத்தித்துறை கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது தவறி படகின் பின்புறமாக கடலில் விழுந்துள்ளார்.
இதன்போது படகை இயக்கும் உலோக காற்றாடி மீனவரின் வலது கால் மற்றும் கையை சிதைத்துள்ளது. இதனையடுத்து மீனவர் இன்றைய தினம் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். பிளாஸ்டிக் சத்திர சிகிச்சை நிபுணர் இளஞ்செழிய பல்வன் தலமையிலான மருத்துவர்கள் குழாம் சிதைந்த பாகங்களை மீள பொருத்தி
மறுவாழ்வு கொடுத்துள்ளனர்.