யாழ்.மாவட்டத்தை சேர்ந்த 75 பேர் உட்பட வடக்கில் 100 பேருக்கு தொற்று! யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வு முடிவு..
யாழ்.மாவட்டத்தில் 75 பேர் உட்பட வடக்கில் 100 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.
யாழ்.போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையிலேயே 100 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
யாழ்.மாவட்டத்தில் 75 பேருக்கு தொற்று.
உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 42 பேருக்கும், கோப்பாய் பிரதேச வைத்தியசாலையில் 09 பேருக்கும், யாழ்.போதனா வைத்தியசாலையில் 08 பேருக்கும்,
சாவகச்சேரி ஆதா வைத்தியசாலையில் 06 பேருக்கும், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 05 பேருக்கும், தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் 03 பேருக்கும்,
ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலையில் ஒருவருக்கும், புங்குடுதீவு பிரதேச வைத்தியசாலையில் ஒருவருக்கும்,
முல்லைத்தீவு மாவட்டத்தில் 14 பேருக்கு தொற்று,
வெலிஓயா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 09 பேருக்கும், புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் 02 பேருக்கும், முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் 02 பேருக்கும்,
மல்லாவி ஆதார வைத்தியசாலையில் ஒருவருவருக்கும்,
வவுனியா மாவட்டத்தில் 05 பேருக்கு தொற்று,
வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் 02 பேருக்கும், செட்டிகுளம் ஆதார வைத்தியசாலையில் 02 பேருக்கும், வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவருக்கும்,
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் 02 பேருக்கும், மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் ஒருவருக்கும், முள்ளியவளை தனிமைப்படுத்தல் நிலையத்தில் 02 பேருக்கும்,
கோப்பாய் தனிமைப்படுத்தல் நிலையத்தில் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.