யாழ்.மாவட்டத்தில் சடலங்களை தகனம் செய்வதில் நெருக்கடி! யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் - யாழ்.மாநகர முதல்வர் இடையில் சந்திப்பு..

ஆசிரியர் - Editor I

கொரோனா தொற்றுக் காரணமாக மரணிப்பவர்களின் உடலங்களைத் தகனம் செய்வதில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை தொடர்பாக யாழ்.போதானா வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தியின் ஒழுங்கமைப்பில் முக்கிய சந்திப்பு நேற்று யாழ்.போதனா வைத்தியசாலையில் நடைபெற்றுள்ளது. 

இச்சந்திப்பில் மாநகர முதல்வர், போதானா வைத்தியசாலையின் பிரதிப்பணிப்பாளர், யாழ்ப்பாணம் பொலிஸ் அதிகாரி, மாநகர பொறியிலாளர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். கொரோனா தொற்றுக் காரணமாக மரணிப்பவர்களின் உடலங்களைத் தகனம் செய்வதில் மிகுந்த நெருக்கடி நிலை காணப்படுவதாகவும் 

வடமாகாணத்தில் இதுவரை 52 உடலங்கள் தகனம் செய்யபபட வேண்டிய நிலையில் இருப்பதாகவும் யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் ஒரே நேரத்தில் 20 வரையான உடலங்களையே குளிர்ஊட்டியில் பாதுகாத்து வைக்ககூடிய வசதியே காணப்படுவதாகவும் 

இனிவரும் காலங்களில் தகனம் செய்வதில் இவ் நெருக்கடிநிலை தொடருமாயின் உடலங்களை குளிர்ஊட்டிக்கு வெளியில் வைக்கவேண்டிய நிலையும் ஏற்படலாம் என்றும் தெரிவித்தார் அந்த வகையில் தற்போது 18 உடலங்கள் யாழ்போதனா வைத்தியசாலையில் இருப்பதாகவும் தகனம் செய்வதில் யாழ்ப்பாணத்தில் ஏற்படுள்ள நெருக்கடி நிலையை போக்குவதற்காக கிங்குராகொடையில் தகனம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்க முயற்சித்தபோதும் 

உறவினர்கள் அதனை விரும்பத நிலை காணப்படுவதாகவும் தெரிவித்தார். இருந்த போதிலும் யாழ்.போதான வைத்தியசாலையில் இருந்து இரண்டு உடலங்களும் கிளிநொச்சி வைத்தியசாலையில் இருந்து 5 உடலங்களுமாக மொத்தம் 9 உடலங்கள் வரை இன்று கிங்குராகொடையில் தகனத்திற் கொண்டு செல்லப்படவுள்ளதாக பணிப்பாளர் தெரிவித்தார். 

அத்துடன் யாழ்.மாநகர சபை தற்போது தினமும் 5 உடலங்களைத் தகனம் செய்கின்ற நிலையில் மேலதிகமாக உடலங்களை தகனம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் பணிப்பாளர் வேண்டுகோள் விடுத்தார். 

இது தொடர்பில் கருத்து தெரிவித்த மாநகர முதல்வர் மணிவண்ணன்

நாங்கள் எங்களுடைய தகனம் செய்யும் மையத்தை தொடர்ந்தும் இயங்கவைப்பதற்குரிய ஆளணிகள் தொடர்பில் பிரச்சனைகள் இல்லை அதற்கு நாங்கள் தயாராகவே உள்ளோம் ஆனால் அங்கிருக்கின்ற தகனம் செய்யும் இயந்திரம் அதற்கு இடம் கொடுக்குமா என்பது தான் பிரச்சனை. இன்று(நேற்று) கூட இயந்திரத்தில் ஏற்பட்ட பழுந்து ஏற்பட்டது. அது சீர் செய்யப்பட்டது. இதனால் 5 உடலங்களை தகனம் செய்கின்ற எம்மால் 

இன்று(நேற்று) 4 உடலங்களை மட்டுமே தகனம் செய்ய முடிந்தது.எனவே இந் நிலையினை கருத்திற்கொண்டு யாழ்ப்பாணத்தில் இன்னொடு தகனம் செய்யும் இயந்திரம் ஒன்றை நிறுவுவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பிலான மதிப்பீடுகள் மற்றும் தொழிநுட்ப அறிக்கைகள் திங்கட் கிழமை கிடைக்கப்பெறும். 

அதன் பிற்பாடு அதனை வேகமாக செய்து முடிக்காலம் என்று தான் எண்ணுவதாக தெரிவித்தார். தற்போது தகனத்திற்கு கொண்டு வரப்படுகின்ற உடலங்கள் குளிரூட்டிக்குள் இருந்து எடுத்து கொண்டு வரப்படுவதனால் அதனை தகனம் செய்வதற்கு நீண்ட நேரம் செல்வதாகவும் சாதாரணமாக 30கிலோ எரிவாயும் தேவைப்படும் இடத்தில் 

இவ்வாறான நிலையில் உள்ள உடலங்களை எரிப்பதற்கு 45 வரையில் தேவைப்படுவதாக தெரிவித்தார். கொரோனோ தொற்றால் மரணிக்கின்றவர்களின் உடலங்களைத் தகனம் செய்கையில் உரிய சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக பின்பற்றியே தகனம் செய்யப்படுவதாகவும் எதிர்காலத்திலும் அவ்வாறான சுகாதார நடைமுறைகளைப் 

பின்பற்றியே உடலங்கள் தகனம் செய்யப்படும் என்றும் தெரிவித்தார். புதிதாக உருவாக்கப்பட இருக்கின்ற மின்தகன நிலையத்தினை அவசர நிலையினைக் கருத்திற் கொண்டு முதலில் தற்காலிகமாக நிறுவி அதனை இயங்க வைப்பதற்குரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு வைத்தியசாலைப் பணிப்பாளர் விடுத்த கோரிக்கையினை ஏற்றுக்கொண்ட மாநகர முதல்வர் இது தொடர்பில் திங்கட்கிழமை கிடைக்கப்பொறுகின்ற 

அறிகையின் பிரகாரம் அடுத்த கட்ட நடவடிகைகளை மேற்கொள்ள முடியும் என்றார். அந்தவகையில் எதிர்வரும் செவ்வாய் கிழமை மீண்டும் இது தொடர்பில் கூடி ஆராய்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு