யாழ்.மாவட்டத்தில் 39 பேர் உட்பட வடக்கில் 126 பேருக்கு தொற்று! யாழ்.போதனா வைத்தியசாலை பரிசோதனை முடிவு..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் 39 பேர் உட்பட வடக்கில் 126 பேருக்கு தொற்று! யாழ்.போதனா வைத்தியசாலை பரிசோதனை முடிவு..

யாழ்.மாவட்டத்தை சேர்ந்த 39 பேர் உட்பட வடமாகாணத்தில் 126 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

யாழ்.போதனா வைத்தியசாலையில் 438 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையிலேயே 126 பேருக்கு தொற்று உறுதியானது. 

யாழ். மாவட்டத்தில் - 39 பேருக்கு தொற்று. 

யாழ். போதனா வைத்தியசாலையில் - 12 பேருக்கும் (உயிரிழந்த ஒருவர் உட்பட), கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் - 12 பேருக்கும், 

சாவகச்சேரி - ஆதார வைத்திய சாலையில் - 05 பேருக்கும், தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் - 04 பேருக்கும், ஊர்காவற்றுறை வைத்தியசாலையில் - 04 பேருக்கும் 

யாழ். மாநகர சபை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் - ஒருவருக்கும், புங்குடுதீவு பிரதேச வைத்தியசாலையில் - ஒருவருக்கும் தொற்று. 

முல்லைத்தீவு மாவட்டத்தில் - 73 பேருக்கு தொற்று.

புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் - 65 பேருக்கும், முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் - 04 பேருக்கும், 

மல்லாவி ஆதார வைத்தியசாலையில் - 03 பேருக்கும், புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் - ஒருவருவருக்கும் தொற்று. 

மன்னார் மாவட்டத்தில் - 07 பேருக்கு தொற்று.

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் - 03 பேருக்கும், முசலி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் - 02 பேருக்கும், 

மன்னார் கடற்படை முகாமில் - 02 பேருக்கும் தொற்று,

வவுனியா மாவட்டத்தில் - 05 பேருக்கு தொற்று.

வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் - 03 பேருக்கும், செட்டிக்குளம் ஆதார வைத்தியசாலையில் - 02 பேருக்கும் தொற்று.

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் - 02 பேருக்கு தொற்று. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு