பிரதேச செயலக ஊழியர்களுக்கு ரீசேட் கொள்வனவில் கொள்ளை லாபம் பார்த்தாரா அரச ஊழியர்? கேள்விப்பட்டேன், ஆராய்ந்து பார்கிறேன் என்கிறார் பிரதேச செயலர்..

ஆசிரியர் - Editor I
பிரதேச செயலக ஊழியர்களுக்கு ரீசேட் கொள்வனவில் கொள்ளை லாபம் பார்த்தாரா அரச ஊழியர்? கேள்விப்பட்டேன், ஆராய்ந்து பார்கிறேன் என்கிறார் பிரதேச செயலர்..

யாழ்.வடமராட்சி கரவெட்டி பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் சீருடையாக ரீசேர்ட் தைத்த விவகாரத்தில் கொள்ளை இலாபம் பார்த்த விடயம் அம்பலத்திற்கு வந்துள்ளது.

கொரோனா பெருந்தொற்றின் மத்தியில் அர்ப்பணிப்பு சேவையை ஒருபுறம் அரச சேவையாளர்கள் ஆற்றிவர இன்னொருபுறம் உத்தியோகத்தர்களின் பணத்தை சுருட்ட இன்னொரு கும்பல் மும்முரமாக ஈடுபட்டுள்ளமை அம்பலமாகியுள்ளது.

உள்ளுர் சந்தைகளை புறந்தள்ளி தனியாரிடம் கரவெட்டி பிரதேச செயலக ஊழியர்களிற்கு சீருடை வடிவமைத்து கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் கொண்டுவரப்பட்டுள்ளது. 

ஊழியர் நலன்புரிச்சங்கத்தின் பணத்திலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட இச்சீருடைகள் தொடர்பில் மேல் அதிகாரிகளிற்கும் தொடர்புள்ளமை தொடர்பில் ஊழியர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

ஏனெனில் 250 உத்தியோகத்தர்களுக்கான ஒருவருக்கு இரண்டு ரீசேட்டுக்கள் வீதம் 500 ஆடைகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது.பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு ஒரு ரீசேட் 800 ரூபாய்க்கு வழங்கப்பட்டுள்ள நிலையில் 

 இதற்காக நலம்புரி சங்கத்தில் இருந்து 500 ரீசேட்டுக்கும் 800 ரூபாய் வீதம் 4 லட்சம் ரூபா பணம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் தொகையாக ரீசேட்டுக்கள் வடிவமைக்கும்போது 600 ரூபாய்க்கு உற்பட்ட தொகையையில் தைக்க முடியும்.

இந்நிலையில் கரவெட்டி பிரதேச செயலகத்தைச் சேர்ந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் குறித்த ஆடைகளை தைப்பதற்காக முன் நின்று பணம் பெற்றுக் கொடுத்துள்ள நிலையில் 1 இலட்சம் ரூபாய் வரை லாபம் ஈட்டியதாக 

நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் அறியக் கிடைத்தது. பிரதேச செயலக ஆடைகளைத் தைப்பதற்காக குறித்த அபிவிருத்தி உத்தியோகத்தர் வேறு எங்காவது ஆடை தொழிற்சாலையில் விலை மனுக் கோரலை பெற்றாரா என்பது கேள்வியாகவே உள்ளது. 

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பாக பிரதேச செயலரை தொடர்பு கொண்டு கேட்டபோது அவ்வாறான சம்பவம் தொடர்பில் அறிந்துள்ளதாகவும் அது குறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியிருக்கின்றார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு