கொரோனா தொற்று உறுதியானபோதும் சுகாதார நடைமுறைகளை மதிக்காத பெண்! நீதிமன்றம் கடும் எச்சரிக்கை, யாழ்.மாநகருக்குள்..
சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளுக்கு ஒத்துழைக்காமைக்காக யாழ்.மாநகர எல்லைக்குள் வசிக்கும் பெண் ஒருவர் சிறுவர் நீதிமன்றினால் எச்சரிக்கப்பட்டிருக்கின்றார்.
யாழ்.மாநகர எல்லைக்குள் வசிக்கும் குறித்த பெண் அதிகாரி கடந்த காலங்களில் பிரதேச செயலகங்களில் அதி உயர் பதவி வகித்தவர் என்று தெரியவந்துள்ளது.
அவர், அண்மையில் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டிருந்தபோதிலும்
அவரை சுகாதார நடைமுறைகளுக்கு உட்படுமாறும் பிசிஆர் பரிசோதனைக்கு சமூகமளிக்குமாறும் சுகாதாரத் தரப்பினர் பல தடவைகள் வலியுறுத்தியுள்ளனர்.
இருந்தபோதிலும் அவர் அதற்கு ஒத்துழைப்பு வழங்க மறுத்ததாக தெரியவருகிறது. இந்நிலையில் யாழ்.குருநகர் சிறுவர் நீதிமன்றத்தில் சுகாதாரத் தரப்பினரால்
அவர் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.அவரை அழைத்த நீதிபதி நளினி கந்தசாமி, நாட்டில் நடைமுறையில் உள்ள சுகாதார நடைமுறைச் சட்டத்தினைக்
கடைப்பிடிக்குமாறும் சுகாதாரத் தரப்பினருக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் எச்சரித்ததாக தெரியவந்துள்ளது.