பாடசாலை மாணவர்களுக்கு விரைவில் தடுப்பூசி! கல்வி அமைச்சின் செயலாளர் விடுத்திருக்கும் அறிவித்தல்..
பாடாலை மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்குவத தொடர்பாக கல்வியமைச்சு தீவிர அவதானம் செலுத்திவருகின்றது. இதன்படி க.பொ.த சாதாரணதர மற்றும் உயர்தர மாணவர்களுக்கு தடுப்பூசியை வழங்குவது குறித்தே தற்போது ஆராயப்படுகின்றது.
இது குறித்து கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளதாவது, பாடசாலை மாணவர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்துவது குறித்து, சுகாதார அமைச்சுடன் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் பரிந்துரைகளுக்கு அமைய, பாடசாலை மாணவர்களுக்கு கொவிட் தடுப்பூசியை பெற்றுக்கொடுக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார். எனினும், பாடசாலை மாணவர்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்கும்
சரியான திகதி இதுவரை நிர்ணயிக்கப்படவில்லை என அவர் கூறியுள்ளார். நாட்டில் சுமார் 45 இலட்சம் பாடசாலை மாணவர்கள் உள்ளதாகவும், அவர்களை பாதுகாக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.