SuperTopAds

யாழ்.வடமராட்சி கிழக்கில் 3 பிரதேசங்களை பகுதியளவில் முடக்க சுகாதார பிரிவு மாவட்ட கொவிட் செயலணியிடம் கோரிக்கை..

ஆசிரியர் - Editor I
யாழ்.வடமராட்சி கிழக்கில் 3 பிரதேசங்களை பகுதியளவில் முடக்க சுகாதார பிரிவு மாவட்ட கொவிட் செயலணியிடம் கோரிக்கை..

யாழ்.மருதங்கேணி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட 3 பகுதிகளை பகுதியளவில் முடக்குவதற்கு சுகாதார பிரிவினர் மாவட்ட கொவிட் செயலணியிடம் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

மருதங்கேணி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட வடமராட்சி கிழக்கின் வெற்றிலைக்கேணி (ஜே.432), முள்ளியான்(ஜே433), போக்கறுப்பு (ஜே434)  ஆகிய 3 பகுதிகளில் 

பகுதியளவில் முடக்குவதற்கு இந்த கோரிக்கை மாவட்ட செயலணியிடம் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், அதனடிப்படையில் 

குறித்த கோரிக்கை தொடர்பான மேல் நடவடிக்கைள் எடுக்கப்படுவதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் ஊடாக அறிய முடிகின்றது.