ஆபத்தான நிலையில் உள்ளதா? கேரதீவு - சங்குப்பிட்டி பாலம், பாகங்கள் உக்கிபோயுள்ளது..

ஆசிரியர் - Editor I
ஆபத்தான நிலையில் உள்ளதா? கேரதீவு - சங்குப்பிட்டி பாலம், பாகங்கள் உக்கிபோயுள்ளது..

யாழ்ப்பாணம் - பூநகரி இடையிலுள்ள கேரதீவு - சங்குப்பிட்டி பாலத்தின் பாகங்கள் கறள் பிடித்து உக்கிப்போயுள்ளதாக கூறும் மக்கள் இந்த பாலம் ஆபத்தான கட்டத்தில் உள்ளதா? என கேள்வி எழுப்பியிருக்கின்றனர். 

குறித்த பாலம் 16.01.2011 அன்று இன்றைய பிரதமரும் அப்போதைய ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்சவினால் திறந்து வைக்கப்பட்டது. பாரிய நிதி செலவில் நிர்மானிக்கப்பட்ட குறித்த பாலம் தற்பொழுது சேதமடைந்து வருவதை அவதானிக்க முடிகின்றது.

பாலம் அமைந்துள்ள பகுதியில் காணப்படும் கொங்கிறீட்டிலான பகுதிகளில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதுடன், பாலத்தின் பாகங்கள் துருப்பிடித்து சிதைவுகள் ஏற்பட்டு வருகின்றமையையும் அவதானிக்க முடிகின்றது.

பாலத்தை தாங்கும் ஆணிகள், நட்டுகள் மற்றும் பாலத்தின் முக்கிய பகுதிகளில் துருப்பிடித்து சிதைவடைகின்றமையையும் அவதானிக்க முடிகின்றது. இதேவேளை, பாலத்தின் வடக்கு பக்கமாக பொருத்தபபட்டிருந்த பாதுகாப்பு பகுதிகள் சிலவும் 

காணாமல் போயுள்ளமையையும் அவதானிக்க முடிகின்றது. ஆரம்பத்தில் வருடம் தோறும் குறித்த பாலத்தை பராமரித்து வந்ததாகவும், தற்பொழுது குறித்த பாலம் பராமரிக்கப்படுவதில்லை எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

மக்களின் வரிப்பணத்தினைக் கொண்டு பாரிய நிதி செலவில் அமைக்கப்பட்ட குறித்த பாலத்தை உரிய முறையில் பாதுகாக்கி வீதி அபிவிருத்தி அதிகார சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

மக்களின் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு தொடர்பில் அக்கறை செலுத்தி உடன் கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொண்டு பாதுகாப்பினை உறுதிப்படுத்தவும், பாலத்தை பாதுகாக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கும்வரை நாம் தொடர்ந்தும் அவதானத்துடன்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு