யாழ்.சாவகச்சோியில் எழுமாற்று பீ.சி.ஆர் பரிசோதனை! கிராமசேவகர் உட்பட 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..

யாழ்.சாவகச்சோி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இன்று மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று 94 பேருக்கு அன்டிஜன் பரிசோதனையிலேயே குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தொற்றாளர்களில், தென்மராட்சி பிரதேசத்தில் பணியாற்றும் கிராம அலுவலர், கொடிகாமம் பிரதேச வைத்தியாசாலை ஊழியர்,
கோண்டாவில் அரச பேருந்து போக்குவரத்து சபையில் பணியாற்றும் ஊழியர் உட்பட்ட 14 பேரே தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.