யாழ்.சாவகச்சோி வைத்தியாசலை நோயாளர் விடுதியில் பல மணிநேரம் வைக்கப்பட்டிருந்த கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் சடலங்கள்!

ஆசிரியர் - Editor I
யாழ்.சாவகச்சோி வைத்தியாசலை நோயாளர் விடுதியில் பல மணிநேரம் வைக்கப்பட்டிருந்த கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் சடலங்கள்!

யாழ்.சாவகச்சோி வைத்தியசாலை நோயாளர் விடுதியில் கொரோனா தொற்றினால் உயிரிழந்த இருவரின் சடலங்கள் பல மணிநேரம் காணப்பட்டமையினால் விடுதியிலிருந்த மற்றய நோயாளிகள் பலத்த அசௌகரியங்களை எதிர்கொண்டதாக கூறப்படுகின்றது. 

மேற்படி சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, கொரோனாத் தொற்றுக்குள்ளான இருவர் சாவகச்சேரி வைத்தியசாலையில் கொரோனா விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை உயிரிழந்திருந்தனர்.

இருந்தபோதிலும் பிற்பகல் 3 மணிவரையில் சடலங்கள் இரண்டும் அவர்களின் கட்டிலிலேயே காணப்பட்டிருக்கின்றன. சம்பவத்தால் ஏனைய கட்டிலில்களில் இருந்த நோயாளர்கள் உள ரீதியாக பலத்த சங்கடங்களை எதிர்கொண்டதாக தெரியவருகிறது.

சம்பவம் தொடர்பில் வைத்தியசாலையின் நிர்வாகத்தினரை தொடர்புகொண்டபோது, யாழ்ப்பாணத்தில் சடலம் எரிப்பதற்கான அனுமதி பிற்பகல் வரையில் கிடைக்கவில்லை என்பதாலும் பிரேத அறையில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு 

கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளமையாலுமே சடலத்தை அங்கிருந்து அகற்றவில்லை என்று தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து 3 மணியளவில் ஒரு சடலம் எரியூட்டுவதற்காக எடுத்துச் செல்லப்பட்ட நிலையில் 4 மணிக்கு பின்னரே 

மற்றைய சடலம் நோயாளர் விடுதியிலிருந்து எடுக்கப்பட்டு பிரேத அறைக்கு மாற்றப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு