சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று! நடவடிக்கை எதுவுமில்லை என குற்றச்சாட்டு..

ஆசிரியர் - Editor I
சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று! நடவடிக்கை எதுவுமில்லை என குற்றச்சாட்டு..

யாழ்.மாவட்டத்திலுள்ள சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் ஒன்றில் ஊழியர்கள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில் அலுவலகத்தை மூடுவதற்கோ, மாற்று ஒழுங்கு செய்வதற்காக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால் அச்சத்துடனேயே ஊழியர்கள் அலுவலகம் செல்வதாக குறித்த அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் சிலர் கூறியிருக்கின்றனர். இது குறித்து மேலும் அவர்கள் தகவல் தருகையில் 9 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

ஆனாலும் அலுவலகத்தை மூடுவதற்கு அல்லது தொற்று நீக்குவதற்கு அல்லது வேறு பணியாளர்களை கொண்டு அலுவலகத்தை நடத்துவதற்கு அதற்கும் மேலாக பீ.சி.ஆர் பரிசோதனை நடத்துவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க மறுப்பதாக கூறுகின்றனர். 

இது குறித்து மாகாண சுகாதார பணிப்பாளர் உள்ளிட்ட பலருக்கு முறைப்பாடு வழங்கப்பட்டிருந்தாலும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. என பெயர் குறிப்பிட விரும்பாத மேற்படி ஊழியர்கள் கூறியிருக்கின்றனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு