யாழ்.மாவட்டத்தில் ஆபத்தான “டெல்டா” திரிபு வைரஸ் பலியெடுப்பு ஆரம்பம்! கந்தரோடையில் உயிரிழந்தவருக்கு டெல்டா தொற்று..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் ஆபத்தான “டெல்டா” திரிபு வைரஸ் பலியெடுப்பு ஆரம்பம்! கந்தரோடையில் உயிரிழந்தவருக்கு டெல்டா தொற்று..

கொரோனா தொற்று காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலை கொரோனா சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த முதியவர் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ள நிலையில் அவருக்கு டெல்டா திரிபு வைரஸ் தொற்றுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. 

கடந்த செவ்வாய் கிழமை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலை கொரோனா சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தொடர்ச்சியாக மூச்சு திணறல் ஏற்பட்டநிலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமித்தனர்.

ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் காலை உயிரிழந்துள்ளார். இந்நிலையில் உயிரிழந்த கார்கார துரைசாமி என்ற கந்தேரோடையை சேர்ந்த குறித்த நபருக்கு ஆபத்தான டெல்டா வகை திரிபு வைரஸ் தொற்று ஏற்பட்டிருந்ததாக சுகாதார பிரிவினர்

குடும்பத்தாருக்கு தொியப்படுத்தியிருக்கின்றனர். மேலும் தெல்லிப்பழை பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர் கடந்த மாதம் உயிரிழந்த நிலையில் அவருக்கும் டெல்டா வகை திரிவு வைரஸ் தொற்று காணப்பட்டதாக கூறப்படுகின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு