SuperTopAds

யாழ்.கொழும்புத்துறை கடலில் குளிக்க சென்றவர் சடலமாக மீட்பு!

ஆசிரியர் - Editor I
யாழ்.கொழும்புத்துறை கடலில் குளிக்க சென்றவர் சடலமாக மீட்பு!

யாழ்.கொழும்புத்துறை - உதயபுரம் கடலில் குளிக்க சென்றிருந்த முதியவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றார். 

இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 5.30 மணியளவில் கடலுக்கு நீராடச் சென்ற இவர், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாத நிலையில், 

காலை 8.30 மணியளவில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.அப்பகுதியைச் சேர்ந்த மனுவேல் செபஸ்டியன் என்ற 65 வயதான முதியவரே 

இவ்வாறு சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.