கொரோனா தொற்றாளர்களை வீடுகளில் வைத்துப் பராமரிக்கும், சிகிச்சையளிக்கும் புதிய நடைமுறை! இன்று அமுலுக்கு வந்தது...

ஆசிரியர் - Editor I
கொரோனா தொற்றாளர்களை வீடுகளில் வைத்துப் பராமரிக்கும், சிகிச்சையளிக்கும் புதிய நடைமுறை! இன்று அமுலுக்கு வந்தது...

கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் எவையும் இல்லாத நோயாளிகளை வீடுகளில் வைத்து பராமரிப்பு மற்றும் சிகிச்சையளிக்கும் நடைமுறை இன்று தொடக்கம் அமுல்படுத்தப்படுகின்றது. 

இதுவரை காலமும் பரீட்சார்த்தமாக மேல் மாகாணத்தில் மாத்திரம் அமுல்படுத்தப்பட்டிருந்த இந்த நடைமுறை, இன்று முதல் நாடு முழுவதும் அமுல்படுத்தப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.

2 முதல் 65 வயது வரை நோய் அறிகுறிகள் தென்படாத மற்றும் சிறு நோய் அறிகுறிகள் தென்படும் நோயாளர்களையே, வீடுகளில் தங்க வைத்து, வைத்தியர்களின் கண்காணிப்பிற்கு உட்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாளாந்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்ததை அடுத்து, வைத்தியசாலைகளில் இடபாற்றாக்குறை ஏற்பட்ட நிலையிலேயே, சுகாதார அமைச்சு இந்த தீர்மானத்தை எட்டியது.

PCR அல்லது என்டிஜன் பரிசோதனைகளின் ஊடாக, கொவிட் தொற்றாளர் என அடையாளம் காணப்படுவோர், பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியின் முழுமையான பரிசோதனையின் பின்னர், 

குறித்த கொவிட் தொற்றாளர் அவரது வீடுகளிலேயே தங்க வைத்து, சிகிச்சை வழங்க சுகாதார வைத்திய அதிகாரி பரிந்துரை செய்ய வேண்டும் என அமைச்சு குறிப்பிடுகின்றது.

அதன்பின்னர், தொலைபேசி ஊடாக பதிவு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு, வைத்தியர்களின் கண்காணிப்பில் சிகிச்சைகள் ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

24 மணிநேரமும் செயற்படும் 1390 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை மேற்கொண்டு, குறித்த நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு