யாழ்.நகர்பகுதி உள்ளிட்ட பல இடங்களில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட கும்பல் சிக்கியது!

ஆசிரியர் - Editor I
யாழ்.நகர்பகுதி உள்ளிட்ட பல இடங்களில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட கும்பல் சிக்கியது!

யாழ்.மாவட்டத்தில் பல வழிப்பறி கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட கும்பலை மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரினர் கைது செய்துள்ளனர். 

குறித்த வழிப்பறி கும்பல் கடந்த 3 மாதகாலமாக யாழ்ப்பாண வீதிகளில் பயணிப்போரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

நேற்றைய தினம் கோப்பாய் பிரதேசத்தில் கோப்பாய் பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர் ஒருவரின் தொலைபேசி,

50 ஆயிரம் ரூபா பணம், கைப்பை மேலும் பல ஆவணங்களை திருடி சென்றமையாழில் பத்திரிகை நிறுவனத்தில் கடமையாற்றும் ஒருவரின் 

கைத்தொலைபேசியினை திருடிசென்றமை, சுண்ணாக பகுதியில் ஆசிரியர் ஒருவரின் கைபை இரண்டு தொலைபேசிகள்,

முப்பதாயிரம் பணம் கொள்ளையடித்த மானிப்பாயில் நபர் ஒருவரின் கைப்பை திருடிய திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை 

 மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினர் கைது செய்துள்ளனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது 

கொள்ளையிடப்பட்ட பணம் மற்றும் கை பை மற்றும் ஏனைய ஆவணங்கள் மீட்கப்பட்டுள்ளன. 

எனினும் அவர்கள் குடு பாவனையாளர்கள் என்பதனால் தமக்கு குடிப்பதற்கு பணம் தேவை என்பதனால் வழிபறியில் ஈடுபட்டதாகவும் 

ஆரம்பகட்ட விசாரணை யில் தெரிவித்தனர் கைது செய்யபட்டு இருவரும் சாவகச்சேரி பகுதியை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர். 

ஏனையஇவ்வாறான திருட்டு சம்பவங்கள் இடம்பெறும் பட்சத்தில் பாதிக்க பட்டவர்கள் உடனடியாக மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் தொடர்பு கொள்வதன் 

மூலம் தமக்குரிய பொருட்களை மீட்க முடியும் எனவும் தெரிவித்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு