யாழ்.தாதியர் பயிற்சிக் கல்லூரியில் கொரோனா தொற்று..! மாணவர்களை கட்டாயம் வகுப்புக்கு அழைக்கும் நிர்வாகம்..
யாழ்.போதனாவைத்திய சாலையில் அமைந்துள்ள தாதியர் பயிற்சிக் கல்லூரியில் அனேகமான மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் பலர் வீடுகளில் இருந்து குறித்த பாடசாலைக்கு செல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சுமார் 60-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தாதிய பயிற்சியை மேற்கொள்ளும் நிலையில் 25க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த மாணவர்கள் அனைவரும்
இரு கொவிட் தடுப்பூசிகளையும் பெற்றவர்கள். ஆதலால் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பில்லை எனக் கூறி வகுப்புக்கு வருமாறு அழைக்கப்பட்டுள்ளனர். யாழ்.போதனா வைத்தியசாலைக்கு பயிற்சிக்கு செல்லவும்
மாணவர்கள் சிலர் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துவதால் அவர்களிடமிருந்து பிறருக்கு கொரோனாத் தொற்று அதிகம் பரவுவதற்கான சாத்தியங்கள் உள்ளது.கல்வி பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள்
தங்கள் பிள்ளைகள் பயிற்சிக்கு செல்வதற்கு விரும்பாத நிலையிலும்நிர்வாகத்தின் கடுமையான உத்தரவுகள் இதனால் தமது பிள்ளைகளின் கல்வி பாதிக்கப்படும் என்ற அச்சத்தில் பயிற்சிக்கு செல்ல அனுமதித்துள்ளதாக அறியக் கிடைத்தது.
குறித்த விடயம் தொடர்பில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை மாகாண சுகாதார பணிப்பாளரின் ஊடக சந்திப்பில் குறித்த விடயம் தொடர்பில் வினவப்பட்டது. இதன்போது கருத்து தெரிவித்த சுகாதார பணிப்பாளர்
குறித்த பயிற்சிக் கல்லூரி யாழ்.போதனா வைத்தியசாலையின் கீழ் செய்யப்படுவதால் குறித்த விடயம் தொடர்பில் அவர்களே முடிவு எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.