SuperTopAds

வடமாகாண மக்களுக்கு சுகாதார பணிப்பாளர் விடுத்துள்ள அறிவிப்பு! எதிர்வரும் 9ம் திகதி 2ம் கட்ட பணிகள்..

ஆசிரியர் - Editor I
வடமாகாண மக்களுக்கு சுகாதார பணிப்பாளர் விடுத்துள்ள அறிவிப்பு! எதிர்வரும் 9ம் திகதி 2ம் கட்ட பணிகள்..

வடமாகாணத்தில் ஜூலை மாதம் முதலாம் கட்ட சினோபாம் தடுப்பூசியை பெற்றவர்களுக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசியை எதிர்வரும் 9 ஆம் திகதியிலிருந்து வழங்குவதற்கு ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாக வடமாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

நேற்றைய தினம் யாழ்.பண்ணையில் அமைந்துள்ள வடமாகாண சுகாதார பணிமனை அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில் 

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து காணப்படும் நிலையில் வடக்கு மாகாணத்திலும் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.வடக்கு மாகாணத்தில் நேற்று முன்தினம் புதன்கிழமை 

128 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 187 கொரோனா மரணங்கள் சம்பாதித்துள்ளது.இலங்கையில் கொரோனா தடுப்பூசி பெறாத வயது முதிர்ந்தவர்களே அதிகமாக மரணமடைந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் தடுப்பூசியை அனைவரும் பெற்றுக் கள்வதோடு இரண்டாம் கட்ட தடுப்பூசியை செல்பவர்கள் ஏற்கனவே முதலாம் கட்ட தடுப்பூசியை பெற்ற அட்டையை கொண்டு சென்று தடுப்பூசியை பெறமுடியும்.

ஆகவே தற்போது 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசிகள் எதிர்வரும் 7ஆம் திகதி வரை வழங்கப்படவுள்ளதோடு இன்னும் இரண்டு லட்சம் பேருக்கு தடுப்பூசியை வழங்கப்பட வேண்டியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.