திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு மீண்டும் தடை விதிக்கப்படலாம்! தேசிய கொவிட் தடுப்பு செயலணியின் காரசாரம்..

ஆசிரியர் - Editor I
திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு மீண்டும் தடை விதிக்கப்படலாம்! தேசிய கொவிட் தடுப்பு செயலணியின் காரசாரம்..

நாட்டில் டெல்டா வகை திரிபு வைரஸ் பரவல் மோசமான தாக்கங்களை வெளிப்படுத்த ஆரம்பித்துள்ள நிலையில் நாடளாவிய ரீதியில் இடம்பெறும் திருமண நிகழ்வுகள், பொது நிகழ்வுகளை உடனடியாக நிறுத்தவேண்டும்.

மேற்கண்டவாறு பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன கொவிட் கட்டுப்பாட்டு செயலணிக்கு வலியுறுத்தியுள்ளார்.

கொவிட் -19 வைரஸ் பரவல் அச்சுறுத்தல் நிலையில், தற்போது நாடு திறக்கப்பட்டுள்ளதை அடுத்து வைரஸ் பரவல் வேகம் அதிகரிக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் பொது சுகாதார பரிசோதகர் சங்கத்திடம் இது குறித்து வினவிய போதே தலைவர் உபுல் ரோஹன இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறுகையில்,

திருமண நிகழ்வுகளில் வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணும் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கின்றது,பொது நிகழ்வு கொத்தணியொன்று உருவாகிக்கொண்டுள்ளதை நாம் அவதானித்து வருகின்றோம்.

இது வேகமாக சமூக பரவலாக மாற்றமடைய அதிக வாய்ப்புகள் உள்ளது.எனவே தற்போது உள்ள நிலைமையில் திருமண நிகழ்வுகள், ஏனைய மத, கலாசார நிகழ்வுகள், பொது நிகழ்வுகள் மற்றும் மரண நிகழ்வுகளை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது. 

அதற்கான அறிவிப்பை நாம் கொவிட் செயலணிக் கூட்டத்தில் விடுத்துள்ளோம்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு