SuperTopAds

நால்லாட்சி கால செயற்பாடுகளினால் “வடகடல்” நிறுவனம் பாரிய நிதி நெருக்கடியிலாம், நிர்வாகம் குற்றச்சாட்டு..

ஆசிரியர் - Editor I
நால்லாட்சி கால செயற்பாடுகளினால் “வடகடல்” நிறுவனம் பாரிய நிதி நெருக்கடியிலாம், நிர்வாகம் குற்றச்சாட்டு..

நல்லாட்சி அரசாங்கத்தில் முறையற்ற செயற்பாடுகள் காரணமாக வடகடல் நிறுவனம் பாரிய சிக்கல்களை எதிர்கொண்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

கடற்றொழில் செயற்பாடுகள் உட்பட்ட தேவைகளுக்கான நைலோன் வலைகளை உற்பத்தி செய்கின்ற வடகடல் நிறுவனத்தினால் கடந்த 2019 ஆம் ஆண்டு இந்திய தனியார் நிறுவனம் ஒன்றிடம் இருந்து மூலப் பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டன. 

தரப்பரிசோதனைகள் எவையும் இன்றிக் கொள்வனவு செய்யப்பட்ட சுமார் 170,580 அமெரிக்க டொலர் பெறுமதியான குறித்த மூலப் பொருட்களைப் பயன்படுத்தி வலைகள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டது.

இருந்த போதிலும், 2019 ஆம் ஆண்டு நவம்பரில் ஆட்சி மாற்றம் ஏற்படும் வரையில் குறித்த மூலப் பொருட்களுக்கான கொடுப்பனவுகள் செலுத்தப்பட்டிருக்கவில்லை. இதுதொடர்பாக கருத்து தெரிவித்த வடகடல் நிறுவனத்தின் தலைவர் திசைவீரசிங்கம், 

நிர்வாகத்தினை தாங்கள் பொறுப்பேற்றவுடன் வலைகளை கொள்வனவு செய்தவர்களினால் வலைகளின் தரம் தொடர்பாக முறையிடப்பட்டதுடன் நஸ்டஈடும் கோரப்பட்டதாகவும் தெரிவித்தார்.

மேலும், பாதிக்கப்பட்டவர்களின் முறைப்பாடுகள் தற்போது ஜனாதிபதி ஆணைக்குழுவினால் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். அத்துடன், நல்லாட்சி அரசாங்கத்தின் பொறுப்பற்ற செயற்பாடுகளினால் வடகடல் நிறுவனம் பாரிய நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில், 

இந்திய நிறுவனத்திற்கான கொடுப்பனவுகளை செலுத்த முடியாத நிலை காணப்படுகிறது. வடகடல் நிறுவனத்தின் தலைவர், தரமற்ற நைலோன் கொள்வனவு தொடர்பில் மோசடிகள் இடம்பெற்றிருக்கின்றதா என்பது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.