SuperTopAds

வடமாகாண மக்கள் கொவிட்-19 தடுப்பூசி பெறுவதில் பெரும் ஆர்வம்! இராணுவ தளபதி வரவேற்பு..

ஆசிரியர் - Editor I
வடமாகாண மக்கள் கொவிட்-19 தடுப்பூசி பெறுவதில் பெரும் ஆர்வம்! இராணுவ தளபதி வரவேற்பு..

கொவிட் -19 தடுப்பூசி பெறுவதற்கு வடமாகாண மக்கள் காட்டும் அக்கறையை வரவேற்பதாக இராணுவ தளபதியும், தேசிய கொவிட் தடுப்பு செயலணியின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா கூறியுள்ளார். 

இது குறித்து மேலும் அவர் ஊடகங்களுக்கு கருத்து தொிவிக்கும்போது குறிப்பிட்டதாவது, கொரோனாத் தடுப்பூசியைப் பெறுவதில் வடக்கு மக்கள் ஆரம்பத்தில் ஆர்வத்தைக் காட்டவில்லை. 

எனினும், அவர்கள் தற்போது மிகுந்த ஆர்வத்தைக் காட்டி வருகின்றனர். ஒவ்வொரு மாகாண மக்களும் இந்த நடைமுறையைப் பின்பற்ற வேண்டும். கொரோனாவை விரட்டக்கூடிய ஒரே ஆயுதம் தடுப்பூசியே. 

எனவே, நாட்டிலுள்ள மக்கள் அனைவருக்கும் தடுப்பூசிகளை வழங்குவதில் அரசு அதிக சிரத்தையுடன் செயற்படுகின்றது. தடுப்பூசிகளைப் பெற்றுவிட்டோம் எனக் கருதி சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றாமல் மக்கள் இருக்கக்கூடாது. 

கொரோனாத் தடுப்புக்கான சுகாதார விதிகளை சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும் என்றார்.