யாழ்.மாவட்டத்தில் மேலும் 32 பேர் உட்பட வடக்கில் 60 பேருக்கு தொற்று! தொடரும் அபாயம்..
யாழ்.மாவட்டத்தை சேர்ந்த 32 பேர் உட்பட வடமாகாணத்தில் 60 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.
யாழ்.பல்கலைகழக மருத்துவ பீடத்தில் 617 பேருடைய பீ.சி.ஆர் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட நிலையில் 60 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ்.மாவட்டத்தில் 32 பேருக்கு தொற்று.
சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 02 பேர், தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் ஒருவர், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 12 பேர்,
யாழ்.போதனா வைத்தியசாலையில் 10 பேர்,சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 03 பேர், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் ஒருவர்,
கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 03 பேர்,
வவுனியா மாவட்டத்தில் 12 பேருக்கு தொற்று.
செட்டிகுளம் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 09 பேர், புளியங்குளம் பிரதேச வைத்தியசாலையில் ஒருவர், வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் 02 பேர்,
மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் 06 பேர், முல்லைத்தீவு மாவட்ட வைத்திசாலையில் 03 பேர்,
கிளிநொச்சி மாவட்டத்தில் 02 பேருக்கு தொற்று.
பூநகரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர்,அக்கராயன்குளம் பிரதேச வைத்தியசாலையில் ஒருவர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்களுடன் முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் நிலையத்தில் இராணுவத்தினர் 04 பேர், இரணைமடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் ஒருவரும்
தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.