SuperTopAds

யாழ்.மாவட்டம் தொடர்ந்தும் ஆபத்தில்! மேலும் 60 பேருக்கு கொரோனா தொற்று உறுதி, வடக்கில் 80 பேருக்கு தொற்று..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டம் தொடர்ந்தும் ஆபத்தில்! மேலும் 60 பேருக்கு கொரோனா தொற்று உறுதி, வடக்கில் 80 பேருக்கு தொற்று..

யாழ்.மாவட்டத்தில் 62 பேர் உட்பட வடக்கில் 80 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. 

யாழ்.போதனா வைத்தியசாலையில் நடத்தப்பட்ட பரிசோதனையில் 60 பேருக்கும், யாழ்.பல்கலைக்கழக ஆய்வுகூடத்தில் 20 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. 

யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 517 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் யாழ்.மாவட்டத்தினைச் சேர்ந்த 42 பேர் உட்பட 

வடக்கு மாகாணத்தில் 60 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

வேலணை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 19 பேர், யாழ்.போதனா வைத்தியசாலையில் 18 பேர், சங்கானை பிரதேச வைத்தியசாலையில் 02 பேர், 

பண்டத்தரிப்பு பிரதேச வைத்தியசாலையில் ஒருவர், வேலணை பிரதேச வைத்தியசாலையில் 02 பேர், முல்லைத்தீவு மாவட்டத்தில் 11 பேர்,

வெலி ஓயா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 06 பேர், புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 04 பேர், 

புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் ஒருவர், கிளிநொச்சி மாவட்டத்தில் 03 பேர், கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் 02 பேர்,

பளை பிரதேச வைத்தியசாலையில் ஒருவர், வவுனியா மாவட்டத்தில் 02 பேர், புளியங்குளம் பிரதேச வைத்தியசாலையில் ஒருவர்,

செட்டிகுளம் ஆதார வைத்தியசாலையில் ஒருவர், மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் 02 பேர், 

யாழ்.பல்கலைக்கழக ஆய்வுகூடத்தில் 208 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் யாழ்.மாவட்டத்தினைச் சேர்ந்த 20 பேருக்கு 

தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், யாழ்.பல்கலைக்கழக இந்து கற்கைகள் பீட பீடாதிபதி ஒருவர்,

வேலணை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 13 பேர்,சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 06 பேர் 

தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.