SuperTopAds

மதுபோதையில் ஆட்டம்போட்ட கோப்பாய் பொலிஸார்! வீதியில் இராணுவம் நின்றதால் வாயை கட்டி கடத்தி சென்றனர், பொலிஸாருக்கு சாராயம் வாங்கி கொடுத்தவரும் அடித்தார்..

ஆசிரியர் - Editor I
மதுபோதையில் ஆட்டம்போட்ட கோப்பாய் பொலிஸார்! வீதியில் இராணுவம் நின்றதால் வாயை கட்டி கடத்தி சென்றனர், பொலிஸாருக்கு சாராயம் வாங்கி கொடுத்தவரும் அடித்தார்..

மதுபோதையில் வெள்ளை நிற "ஹயஸ்" வாகனம் ஒன்றில் வருகைதந்த கோப்பாய் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள் சிலர் தன்னை காரணமின்றி  தாக்கியதாக பாதிக்கப்பட்ட நபர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட நபர் கூறுகையில் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை இரவு 9.30 மணியளவில் ஹயஸ் வாகனமொன்று எனது வீட்டுக்கு அருகாமையில் நின்றதை அவதானித்தேன்.வீட்டுக்கு அருகாமையில் தோட்டம் காணப்படுவதால் வீதி இல்லாத நிலையில் வாகனம் ஏன் நிற்கிறது? 

என்பதை அவதானிக்க வாகனத்துக்கு அருகில் சென்றபோது குறித்த வாகனத்தில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள் இருப்பதை கண்டேன். அவர்கள் என்னை ஏன்? வந்தாய் நீ அவா குழுவுடன் தொடர்புள்ளதா? மற்றும் விடுதலைப்புலிகள் தொடர்பான படங்களை நீதான் பிரசுரிக்கிறாயா? 

எனக் கேட்டு என்னை சரமாரியாக தாக்கினர். வாகனத்தில் 6 கோப்பாய் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள் இருந்ததுடன் நால்வர் தமிழ் மொழியில் கதைப்பதை அவதானித்தேன். ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் கையிலிருந்த பிஸ்டலால் என் வாயில் இடித்தார்.

என்னை இழுத்து வாகனத்தின் பின் டிக்கியில் போட்டனர். என்னை கொண்டு செல்லும் வழியில் இராணுவத்தினர் நின்றதால் நான் கத்தினாலும் என்பதற்காக எனது வாயை அணிந்திருந்த மேல் அங்கியினால் கட்டினர். வாகனத்தில் மதுப் போத்தல்கள் இருப்பதை அவதானித்ததுடன் 

வாகனத்தை ஓரிடத்தில் நிறுத்தி மது அருந்திக் கொண்டிருந்தபோது நான் தப்பி ஓடியதாக இளைஞன் தெரிவித்துள்ளார். என்னை கடத்திய வாகனத்தின் சிசிடிவி காட்சிகள் அருகில் உள்ள வீடுகளின் பதிவாகியுள்ள நிலையில் பொலிசார் நீதியான விசாரணை மேற்கொண்டால் உண்மை அம்பலமாகும்.

வாகனத்தை செலுத்திய நபரும் போலீசாருடன் சேர்ந்து என்னை தாக்கியதுடன் அவரும் மதுபோதையில் காணப்பட்டார். தன்னைக் காணாத பெலிஸார் மீண்டும் குறித்த வாகனத்தில் வீடு தேடி வந்த நிலையில் தனது உயிருக்கு பாதுகாப்பு தரும்படி யாழ்.மனித உரிமைகள் ஆணைக்குழு பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடும் பதிவு செய்யப்பட்டுள்ளது.