பொதுமக்களை தள்ளி விழுத்தி கடற்படை வாகனத்தில் நில அளவைாளர்களை அனுப்பிய பொலிஸார்! வட்டுவாகலில் பதற்றம்..
வட்டுவாகல் கோட்டபாய கடற்படைமுகாமிற்காக காணி அபகரிப்பை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில் பொதுமக்களை தள்ளி விழுத்திய பொலிஸார் கடற்படையின் வாகனத்தில் நில அளவையாளர்களை காணி அளக்க அழைத்து சென்றனர்.
முல்லைத்தீவு – வட்டுவாகல் பகுதியில் அமைந்துள்ள கோட்டாபய கடற்படை முகாமுக்கு முன்பாக எதிர்ப்பு நடவடிக்கை பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டது.கடற்படை முகாமிற்கான காணி சுவீகரிப்பு நடவடிக்கைக்காக
குறித்த பகுதிக்கு நில அளவை திணைக்கள அதிகாரிகள் சென்றுள்ளனர். இந்நிலையில் நில அளவீட்டை நிறுத்துமாறு கோரி வட்டுவாகல் பகுதியில் முல்லைத்தீவு பரந்தன் பிரதான வீதியை மறித்து மக்களும் மக்கள் பிரதிநிதிகளும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது பொலிஸார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தள்ளிவிட்டு கடற்படை வாகனத்தில் நில அளவையாளர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.