SuperTopAds

கோட்டபாய கடற்படை முகாமிற்கு காணி சுவீகரிக்கப்படுவதை எதிர்த்து போராட்டம்! வீதியை மறித்து பதற்றத்தில் மத்தியிலும் தொடர்கிறது..

ஆசிரியர் - Editor I
கோட்டபாய கடற்படை முகாமிற்கு காணி சுவீகரிக்கப்படுவதை எதிர்த்து போராட்டம்! வீதியை மறித்து பதற்றத்தில் மத்தியிலும் தொடர்கிறது..

முல்லைத்தீவு - வட்டுவாகல் கோட்டபாய கடற்படைமுகாமிற்காக சுமார் 617 ஏக்கர் காணியை சுவீகரிப்பிற்காக அளவீடு செய்ய எடுக்கப்படும் நடவடிக்கையை எதிர்த்து இன்று தொடக்கம் எதிர்ப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

கடற்படை முகாமிற்கான காணி சுவீகரிப்பு நடவடிக்கைக்காக குறித்த பகுதிக்கு நில அளவை திணைக்கள அதிகாரிகள் சென்றுள்ளனர். இதன்போது அந்த இடத்தில் ஒன்று கூடிய காணி உரிமையாளர்கள் 

மற்றும் அரசியல் பிரமுகர்கள் இணைந்து காணி அளவீடு செய்ய வேண்டாம் என்ற கோரிக்கையை முன்வைத்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.இந்நிலையில் குறித்த பகுதியில் பதற்றமான சூழல் நிலவியுள்ளதுடன் 

கடற்படை முகாமுக்குள் கலகம் அடக்கும் கடற்படையினரும் வரவழைக்கப்பட்டுள்ளனர். கோட்டாபாய கடற்படை முகாம் உள்ள 617 ஏக்கர் நிலத்தில் பெரும்பாலான பகுதி 

பொதுமக்களுக்கு சொந்தமான நிலங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.