SuperTopAds

யாழ்.மாவட்டத்தில் தொடரும் கொரோனா அபாயம்! நேற்றும் 29 பேருக்கு தொற்று, யாழ்.போதனா வைத்தியசாலை முடிவு..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் தொடரும் கொரோனா அபாயம்! நேற்றும் 29 பேருக்கு தொற்று, யாழ்.போதனா வைத்தியசாலை முடிவு..

யாழ்.மாவட்டத்தில் 29 பேர் உட்பட மாகாணத்தில் 44 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

யாழ்.போதனா வைத்தியசாலையில் 623 பேருடைய பீ.சி.ஆர் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டிருந்த நிலையில் 44 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

யாழ்.மாவட்டத்தில் 29 பேருக்கு தொற்று.

யாழ்.போதனா வைத்தியசாலையில் 11 பேர், கோப்பாய் பிரதேச வைத்தியசாலையில் 02 பேர், பண்டத்தரிப்பு பிரதேச வைத்தியசாலையில் 02 பேர், 

கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர், யாழ்.மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர்,

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 02 பேர், தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் 02 பேர், 

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் ஒருவர், மானிப்பாய் பிரதேச வைத்தியசாலையில் 03 பேர், அளவெட்டி பிரதேச வைத்தியசாலையில் ஒருவர்,

தனியார் வைத்தியசாலையில் ஒருவர், வேலணை பிரதேச வைத்தியசாலையில் 02 பேர், மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் ஒருவர், 

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் ஒருவர், வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 02 பேர், 

கிளிநொச்சி மாவட்டத்தில் தர்மபுரம் பிரதேச வைத்தியசாலையில் ஒருவர், அக்கராயன்குளம் பிரதேச வைத்தியசாலையில் 02 பேர், 

கிளிநொச்சி கொரோனா சிகிச்சை நிலையத்தில் 02 பேர், வெள்ளாமுள்ளிவாய்க்கால் தனிமைப்படுத்தல் நிலையத்தில் 02 பேர், 

காங்கேசன்துறை கடற்படை முகாமில் ஒருவர், ஆனைவிழுந்தான்குளம் தனிமைப்படுத்தல் நிலையத்தில் 03 பேர்