இதுவரை கிடைக்காத “நீதியை தேடி” எனும் நூல் கௌரவ பிரதமரிடம் வழங்கி வைப்பு

ஆசிரியர் - Admin
இதுவரை கிடைக்காத “நீதியை தேடி” எனும் நூல் கௌரவ பிரதமரிடம் வழங்கி வைப்பு

சிரேஷ்ட சட்டத்தரணி கல்யாணந்த திரானகம அவர்கள் எழுதிய இதுவரை கிடைக்காத “நீதியை தேடி” எனும் நூல் இன்று (26) அலரி மாளிகையில் வைத்து கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடம் வழங்கப்பட்டது.

பொலிஸ் சிறையறை, சிறைச்சாலை, நீதிமன்றம் மற்றும் பொது அரங்குகளில் கல்யாணந்த திரனகம அவர்கள் பெற்றுக்கொண்ட அனுபவத்தின் அடிப்படையில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது.

இதன்போது விசேட உரை நிகழ்த்திய பேராசிரியர் இதுராகாரே தம்மரதன தேரர் தெரிவித்ததாவது,

“அரசியல் தொடர்பிலேயே இலங்கையின் வரலாறு எழுதப்பட்டுள்ளது. மன்னர்களின் வரலாறு பற்றியே மகாவம்சம் எழுதப்பட்டுள்ளது. நாட்டின் விவசாயம், கட்டுமானத்துறை, பௌதீக வளம், ஆடை அணிகலன்கள் தொடர்பில் எழுதப்படவில்லை. இதனை இலங்கையின் வரலாற்றை எழுதுவதற்கான விடயங்களை திரட்டிக்கொள்ளக் கூடிய ஒரு நூலாக கருதலாம்” என அவர் தெரிவித்தார்.

வணக்கத்திற்குரிய கொடபொல அமரகித்தி தேரர், கலாநிதி மெதகொட அபயதிஸ்ஸ தேரர் உள்ளிட்ட மஹாசங்கத்தினர் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

மேலும், கௌரவ அமைச்சர்களான விமல் வீரவங்ச, உதய கம்மன்பில, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரன, பிரதமரின் மேலதிக செயலாளர் திரு.சமிந்த குலரத்ன, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் திரு.கபில குணவர்தன மற்றும் கலாநிதி குணதாச அமரசேகர உள்ளிட்ட பலரும் நிகழ்வில் கலந்துக் கொண்டிருந்தனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு