யாழ்.மாவட்டத்தில் பச்சிளம் குழந்தைகள், சிறுவர்கள் உட்பட 34 பேருக்கு தொற்று! மருத்துவபீட ஆய்வு முடிவு..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் பச்சிளம் குழந்தைகள், சிறுவர்கள் உட்பட 34 பேருக்கு தொற்று! மருத்துவபீட ஆய்வு முடிவு..

யாழ்.மாவட்டத்தில் 34 பேர் உட்பட வடமாகாணத்தில் 37 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. 

இதன்படி யாழ்.பல்கலைக் கழக மருத்துவபீட ஆய்வு கூடத்தில் நேற்று 227 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யாழ். மாவட்டத்தில் - 34 பேர்

வேலணை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 12 பேருக்கு (21 - 37 வயதுக்குட்பட்ட பெண்கள்), 

சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 08 பேருக்கு (6 வயது சிறுவன், 17, 42, 76 வயது ஆண்கள், 38, 40, 44, 85 வயது பெண்கள்),

உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 07 பேருக்கு (3, 5 வயது சிறுவர்கள், 13 வயது சிறுமி, 18, 70 வயது பெண்கள், 51, 58 வயது ஆண்கள்)

நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 05 பேருக்கு (18, 44, 44 வயது ஆண்கள், 21, 38, 55 வயது பெண்கள்)

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் - 02 பேர் (பச்சிளம் குழந்தைகள்)

கிளிநொச்சி மாவட்டத்தில் - 02 பேர்அக்கராயனில் - 02 பேருக்கு (38, 43 வயது ஆண்கள்)

முல்லைத்தீவு மாவட்டத்தில் - ஒருவர்முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் - ஒருவர் (92 வயது மூதாட்டி)

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு