யாழ்.மாவட்டத்தில் தொடரும் கொரோனா அபாயம்! மேலும் 24 பேருக்கு தொற்று, வடக்கில் 33 பேருக்கு தொற்று..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் தொடரும் கொரோனா அபாயம்! மேலும் 24 பேருக்கு தொற்று, வடக்கில் 33 பேருக்கு தொற்று..

யாழ்.மாவட்டத்தில் 24 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் 33 பேர் இன்று தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 605 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவற்றின் விபரம் வருமாறு,

யாழ்.மாவட்டத்தில் 24 பேர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் 11 பேர்,

கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 08 பேர்,

கோப்பாய் பிரதேச வைத்தியசாலையில் ஒருவர்,

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒருவர்,

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் 03 பேர்,

கோப்பாய் பிரதேச வைத்தியசாலையில் ஒருவர்,

வவுனியா மாவட்டத்தில் 03 பேர்

செட்டிகுளம் ஆதார வைத்தியசாலையில் 03 பேர்,

கிளிநொச்சி மாவட்டத்தில் 02 பேர்

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் 02 பேர்

மன்னார் மாவட்டத்தில் 03 பேர்

மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் 02 பேர்,

முசலி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டதுடன்,

பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் ஒருவர் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு