வடக்கு பிரதம செயலாளராக பெரும்பான்மை இனத்தவர் நியமனம்! நியமனத்தை எதிர்க்க தமிழ்கட்சிகள் இன்று அவசர கூட்டம்..
வடமாகாண பிரதம செயலாளராக பெரும்பான்மை இனத்தை சேர்ந்த ஒருவர் நியமனம் செய்யப்பட்டிருக்கும் நிலையில்,
குறித்த நியமனத்தை நிறுத்தகோருவதற்கு தமிழ்தேசிய நிலைப்பாட்டில் இயங்கும் சில கட்சிகள் கூட்டாக தீர்மானம் எடுத்துள்ளதாக தொியவருகின்றது.
இன்றைய தினம் யாழ்.நகரில் கலந்துரையாடல் ஒன்றை நடாத்தி தீர்மானத்தை எடுக்கவுள்ளதாக தொியவருகின்றது.
தமிழ்தேசிய கட்சிகள் குறித்த நியமனத்துக்கு எதிராக கண்டன தீர்மானம் ஒன்றினை எடுப்பதுடன் அதனை சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு அனுப்புவதற்கு
நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக அறியக் கிடைக்கிறது.