22 வயதான வீட்டு பணிப் பெண் மீது பாலியல் பலாத்காரம்! நாடாளுமன்ற உறுப்பினர் றிஷாட்டின் மனைவியுடைய சகோதரன் கைது..
22 வயதான பணிப் பெண்ணை பாலியல் பலாத்காரம் புரிந்த குற்றச்சாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியூதீனின் மைத்துனர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண கூறியுள்ளார்.
றிஷாட் பதியுதீனின் உத்தியோகபூர்வ இல்லத்தில் பணிப்பெண்ணாக கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் 2019 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் இருந்த 22 வயதான பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில்
றிஷாட்டின் மனைவியின் சகோதரர் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.