யாழ்.அச்சுவேலியில் நடந்த சம்பவம்! கோவிலுக்குள் சாமி காவி, பூசை வழிபாடுகளை நடத்திய இராணுவம், மக்கள் கோவிலுக்கு வெளியே..
யாழ்.அச்சுவேலி பகுதியில் உள்ள பிள்ளையார் கோவிலில் பொதுமக்கள் வெளியில் நிற்க படையினர் சாமி காவியதுடன், மேலங்கியுடன் வில்லு மண்டபம்வரை சென்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
உலவிக்குளம் சித்தி விநாயர் ஆலயத்தின் வருடாந்த உற்பசத்தின் நேற்றய தினம் தேர் திருவிழா இடம்பெற்றிருந்தது. கொரோனா பரவல் அச்சம் காரணமாக சிறிய தோில் பஞ்சமுக பிள்ளையார் எழுந்தருளி உள்வீதி உலா வந்தார்.
இந்நிலையில் எழுந்தருளி பிள்ளையாரை இராணுவத்தினர் பிள்ளை தண்டில் காவி உள்வீதி உலா வந்தனர். கொரோனா அச்சம் காரணமாக ஆலயத்திற்கு வருகை தந்த பக்தர்கள் பலரும் ஆலயத்தினுள் உள்நுழைய அனுமதிக்கப்படாத நிலையில்
பல இராணுவத்தினர் ஆலயத்தினுள் சென்று வழிபாடுகளை மேற்கொண்டதுடன் சுவாமி காவியும் உள்ளனர். ஆலயத்திற்கு அருகில் வசிக்கும் பலரும் ஆலயத்தின் வெளியே நிற்க இராணுவத்தினர் ஆலயத்தினுள் சென்று வழிபாடுகளை மேற்கொண்டு
சுவாமி காவிமை , குறித்த ஆலயத்தில் பல ஆண்டுகாலமாக வழிபாடு செய்து வரும் அடியவர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது.