யாழ்.நாவற்குழி படைமுகாமில் இராணுவ சிப்பாய் சடலமாக மீட்பு!

ஆசிரியர் - Editor I
யாழ்.நாவற்குழி படைமுகாமில் இராணுவ சிப்பாய் சடலமாக மீட்பு!

யாழ்.நாவற்குழி பகுதியில் உள்ள இராணுவ முகாமில் இராணுவ சிப்பாய் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றார். 

இந்த சம்பம் இன்று அதிகாலை இடம்பெற்றிருக்கின்றது, நாவற்குழி தெற்கு கெமுனு வோச் படைப்பிரிவு படை முகாமில் கடமையிலிருந்த குறித்த சிப்பாய் 

ஒருவர் தன்னைத் தானே சுட்டிருக்கலாம் என கூறப்படுகின்றது. குறித்த சிப்பாய் இராணுவத்தில் இணைந்து 10 மாதங்களே ஆகியுள்ள நிலையில் 

வீட்டில் ஏற்பட்டுள்ள குழப்பநிலை காரணமாக இருக்கலாம். எனவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

சம்பவம் தொடர்பில் இராணுவ பொலிசார் மற்றும் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Radio