நெடுந்தீவிலிருந்து யாழ்.போதனா வைத்தியசாலைக்கு வந்தவருக்கு கொரோனா! வடதாரகை படகுசேவை முடக்கம்..

ஆசிரியர் - Editor I
நெடுந்தீவிலிருந்து யாழ்.போதனா வைத்தியசாலைக்கு வந்தவருக்கு கொரோனா! வடதாரகை படகுசேவை முடக்கம்..

யாழ்.நெடுந்தீவிலிருந்து வடதாரகை படகை பயன்படுத்தி போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற சென்றிருந்தவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கின்றது. 

இந்நிலையில் வடதாரகை படகுசேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, 

நெடுந்தீவு 11 ஆம் வட்டாரத்தினை சேர்ந்த ஒருவர் யாழ் போதனா வைத்தியசாலையில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவதற்காக சென்றிருக்கின்றார். இதன்போது அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில், 

தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. குறித்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றிருக்கின்றது. இதனால் குறிகட்டுவான்-நெடுந்தீவிற்கு இடையில் போக்குவரத்தில் ஈடுபடும் வடதாரகை படகு 

தற்காலிகமாக சேவையினை இடைநிறுத்திவைக்கப்பட்டுள்ளது. நெடுந்தீவு மக்களின் போக்குவரத்திற்காக கூட்டுறவு சங்கத்தின் சமூத்திரதேவா படகு சேவையில் ஈடுபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Radio