யாழ்.மாவட்டத்தில் 11 பேர் உட்பட வடக்கில் 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! யாழ்.போதனா வைத்தியசாலை முடிவுகள்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் 11 பேர் உட்பட வடக்கில் 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! யாழ்.போதனா வைத்தியசாலை முடிவுகள்..

யாழ்.மாவட்டத்தில் 11 பேர் உட்பட வடக்கில் 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. 

யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று 720 பேருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது. 34 பேருக்கு தொற்று உறுதியானது. 

இதன்படி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 05 பேர், யாழ்.போதனா வைத்தியசாலையில் 03 பேர், 

நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர், சங்கானை பிரதேச வைத்தியசாலையில் ஒருவர், 

வேலணை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர், 

மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் 02 பேர்,

கிளிநொச்சி மாவட்டத்தில் 07 பேர்

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் ஒருவர், பளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 06 பேர்,

வவுனியா மாவட்டத்தில் 06 பேர்

வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 05 பேர், வவுனியா ஆடைத் தொழிற்சாலையில் ஒருவர்,

அவர்களுடன்,கிளிநொச்சி தனிமைப்படுத்தல் நிலையத்தில் 05 பேர், புதுக்குடியிருப்பு தனிமைப்படுத்தல் நிலையத்தில் 03 பேருக்கும்

தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

Radio