யாழ்.குளப்பிட்டி பகுதியில் வாள்வெட்டு குழு அட்டகாசம்! வர்த்தக நிலையம் தீக்கிரை, பெண் மீது வாள்வெட்டு முயற்சி..

ஆசிரியர் - Editor I
யாழ்.குளப்பிட்டி பகுதியில் வாள்வெட்டு குழு அட்டகாசம்! வர்த்தக நிலையம் தீக்கிரை, பெண் மீது வாள்வெட்டு முயற்சி..

யாழ்.கொக்குவில் - குளப்பிட்டி சந்திக்கு அருகில் உள்ள கடையொன்றின் மீது அடாவடி குழுவினர் சிலர் தீமுட்டியுள்ளனர்.

இது குறித்து தெரியவருவதாவது , கடைஉரிமையாளரும் அவரது மனைவியும் மனைவியாரது தம்பியும் கடையிலிருந்து 

தமது கடையின் பின்புறத்தே உள்ள வீட்டிற்கு கடையில் உள்ள பொருட்களை கொண்டு சென்ற நேரம் கடைமுன்பாக வந்த அடாவடி குழுவினர் 

பெற்றோல் குண்டுகளை எறிந்து தீமூட்டியதுடன் கடைஉரிமையாளரின் மனைவியின் மீது வாளால் வீச முற்பட்டுள்ளனர்.

இருப்பினும் தெய்வாதீனமாக குறித்த பெண் எதுவித காயமுமின்றி தப்பித்துள்ளார். அலறல் சத்தத்தையறிந்து கடையின் பின்புறம் நின்றவர்கள் 

ஓடி வந்து தீயை அணைக்க முற்பட்டபோது தீக்காயமும் ஏற்பட்டுள்ளது. சம்பவம் இடம்பெற்றபோது அதற்கு அண்மையில் ரோந்து கடமையில்

யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலமையிலான பொலிஸ் குழுவுக்கு தகவல் கிடைத்த நிலையில் உடனடியாக சம்பவ இடத்திற்குள் நுழைந்த

யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலமையிலான குழு வன்முறை கும்பலை துரத்தி சென்றபோதும் அவர்கள் தப்பி ஓடியுள்ளனர். 

இதனையடுத்து சம்பவ இடத்தில் யாழ்.பொலிஸ் தலைமையக பொறுப்பாதிகாரி விசாரணைகளை மேற்கொண்டுள்ளார். 

தொழில் போட்டி காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகின்றது. இச்சம்பவத்தால் கொக்குவில் பகுதியில் பரபரப்பு நிலவியது.

Radio