மரண சடங்கில் கலந்து கொண்டிருந்த 48 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! துரித நடவடிக்கையில் சுகாதார பிரிவு..

ஆசிரியர் - Editor I
மரண சடங்கில் கலந்து கொண்டிருந்த 48 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! துரித நடவடிக்கையில் சுகாதார பிரிவு..

பேருவளை - யாகல ஹெரகஸ்கெலே பிரதேசத்தில் மரண வீடொன்றில் பங்கேற்ற 48 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.

இவ்வாறு அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளர்கள் அனைவரும் ஹெரகஸ்கெலே, மென்டோராவத்த, 

ஏரியகந்த ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் பேருவளை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கடந்த ஜூலை 11ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மரண வீட்டில் இருந்த பெண்ணொருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

அதன்படி, ஜூலை 18 ஆம் திகதி 140 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட அன்ரிஜன் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதுவரையில் 28 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதோடு, குறித்த மரண வீட்டுக்காக வெளி பிரதேசங்களில் இருந்து 

வருகைத் தந்தவர்கள் தொடர்பில் தேடுதல் நடவடிக்கையை சுகாதார பிரிவினர் ஆரம்பித்துள்ளனர். 

இந்நிலையில், இவ்வாறு அடையாளம் காணப்பட்ட அனைத்து கொரோனா நோயாளர்களையும் ஜூலை 19ஆம் திகதி 

மருத்துவமனைகளில் அனுமதிப்பதற்கான நடவடிக்கைகளை சுகாதார பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.

Radio