வார இறுதி நாட்களில் பயணத்தடை விதிக்கும் தீர்மானம் உள்ளதா? இராணுவ தளபதி விளக்கம், நாடு முழுவதும் இன்று தொடக்கம் விசேட கண்காணிப்பு..

ஆசிரியர் - Editor I
வார இறுதி நாட்களில் பயணத்தடை விதிக்கும் தீர்மானம் உள்ளதா? இராணுவ தளபதி விளக்கம், நாடு முழுவதும் இன்று தொடக்கம் விசேட கண்காணிப்பு..

இவ்வார இறுதியில் விடுமுறை நாட்கள் உள்ளபோதும் பயண கட்டுப்பாடுகளை விதிக்கும் தீர்மானம் எதுவும் இல்லை. என இராணுவ தளபதியும், தேசிய கொவிட் தடுப்புச் செயலணியின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா கூறியுள்ளார். 

மாகாணங்களுக்கிடையிலான பயணக் கட்டுப்பாடுகள் மட்டுமே தற்போது நடைமுறையில் உள்ளது. மேலும் ஒரு கொரோனா கொத்தணியைத் தீர்மானிப்பதில் வரவிருக்கும் வார இறுதி விடுமுறை நாள்கள் தீர்க்கமானதாக இருக்கும்

என இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த நிலையிலேயே இராணுவத் தளபதி இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார். மேலும் மாகாண போக்குவரத்து கட்டுப்பாடுகளை மீறி 

மேல் மாகாணத்தில் இருந்து வெளியேற முயன்ற 261 ​​பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். வார இறுதி நாள்களில் அனைத்து மாகாண எல்லைகளிலும் சோதனைச் சாவடிகளை அமைத்து 

சிறப்பு பொலிஸ் குழுக்கள் நிறுத்தப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு