SuperTopAds

யாழ்.மாவட்டத்தில் 23 பேர் உட்பட வடக்கில் 31 பேருக்கு கொரோனா தொற்று, தொடரும் அபாயம்..!

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் 23 பேர் உட்பட வடக்கில் 31 பேருக்கு கொரோனா தொற்று, தொடரும் அபாயம்..!

யாழ்.மாவட்டத்தில் 23 பேர் உட்பட வடக்கில் 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

யாழ்.போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையிலேயே தொற்று உறுதியாகியுள்ளது. 

யாழ்.மாவட்டத்தில் 23 பேருக்கு தொற்று, 

அளவெட்டி பிரதேச வைத்தியசாலையில் 05 பேர், உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 03 பேர், வேலணை பிரதேச வைத்தியசாலையில் ஒருவர், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 02 பேர்,

யாழ்.போதனா வைத்தியசாலையில் 09 பேர், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் 02 பேர், பண்டத்தரிப்பு பிரதேச வைத்தியசாலையில் ஒருவர், 

கிளிநொச்சி மாவட்டத்தில் 02 பேர்,

பளை பிரதேச வைத்தியசாலையில் ஒருவர், கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் ஒருவர், 

வவுனியா மாவட்டத்தில் ஒருவர், 

வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் ஒருவர், 

மன்னார் மாவட்டத்தில் 02பேர்,

மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் 02 பேர், இவர்களுடன் பம்பைமடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் 03 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.