சொகுசு வீட்டில் மது விருந்து!! -சினிமா நடிகை உள்பட 15 பேர் கைது-

ஆசிரியர் - Editor II
சொகுசு வீட்டில் மது விருந்து!! -சினிமா நடிகை உள்பட 15 பேர் கைது-

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சொகுசு வீடு ஒன்றில் மது விருந்து நடத்தி வந்த சினிமா துணை நடிகை மற்றும் 15 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

குறித்த வீட்டில் இரவு நேரத்தில் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என மது போதையில் ஆண்கள், பெண்கள் ஜோடியாக குத்தாட்டம் போடுவதாக கானத்தூர் பொலிஸார் தகவல் கிடைத்தது.

அடையாறு பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு பெண்கள், மதுபோதையில் அரைகுறை ஆடைகளுடன் ஆண்களுடன் சேர்ந்து நடனமாடியபடி இருந்தனர்.

பொலிஸ் விசாரணையில் ராமாபுரத்தை சேர்ந்த ஸ்ரீஜித்குமார் (வயது 34) என்பவர் சினிமா துணை நடிகை ஒருவருடன் இணைந்து இந்த இரவு நேர மது விருந்துக்கு ஏற்பாடு செய்தது தெரியவந்தது.

இந்த விருந்தில் நடனமாட 10 பெண்களை பணம் கொடுத்து அழைத்து வந்திருந்ததும், விருந்தில் கலந்து கொள்ள ஆண் ஒருவருக்கு 5 ஆயிரம் ரூபா வீதம் வசூலித்ததும் தெரிந்தது.

இதையடுத்து பண்ணை வீட்டில் இருந்த ஸ்ரீஜித்குமார் மற்றும் 10 பெண்கள் உள்பட 16 பேரையும் கைது செய்து பொலிஸ் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். 


Radio